×

லாரி மோதி மாணவன் பலி

புழல்: திருவண்ணாமலை அதமம்பாடி கிராமத்ைத சேர்ந்தவர் முனியன். இவரது மகன் சக்திவேல் (17). அதே பகுதி பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கோடை விடுமுறைக்காக சக்திவேல் செங்குன்றம் உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு பைக்கில் செங்குன்றம் அருகில் உள்ள சர்வீஸ் சாலையில் வந்தபோது மணலில் நிலைதடுமாறி விழுந்தார். அப்போது  பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அரியலிங்கம் (50) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Lorry kitty student , Larry, student, kills
× RELATED லாரி மோதி மாணவன் பலி