×

மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க சென்றபோது லாரி மீது அரசு பேருந்து மோதி தனியார் நிறுவன அதிகாரி பலி

சென்னை: சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு விரைவு பேருந்து நேற்று அதிகாலை அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த காரைக்குறிச்சி கிராமம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, சாலையில் சரக்கு லாரி ஒன்று நின்று கொண்டிருந்ததை பஸ் டிரைவர் கவனிக்காததால் லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் பஸ்சில் இருந்த சென்னை அரும்பாக்கம், எம்எம்டிஏ காலனி அம்பேத்கர் தெருவை சேர்ந்த  ரகுபதி (65) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரகுபதி மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக தனது குடும்பத்தினருடன் தஞ்சையில் தனது மகள் வீட்டிற்கு சென்றபோது விபத்தில் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், ரகுபதியின் மனைவி விஜயகுமாரி (62), ஹரிகரன் (12) உள்பட 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு காயமடைந்தவர்களுக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் ரகுபதியுடன் வந்த அவரது மற்றொரு மகள் லாவண்யா என்பவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : groom ,Larry , Mappillai, lorry, government bus, private company officer, kills
× RELATED காதலுக்கு தந்தை எதிர்ப்பு மகள் தற்கொலை