×

மோடி - ஜின்பிங் சந்திப்பு எப்போது?: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி:  ‘பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் சந்தித்து பேசும் தேதியும்,  இடமும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை’ என மத்திய வெளியுற அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரலில் சீனா சென்ற பிரதமர் மோடி, உஹான் நகரில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா வரும்படி ஜின்பிங்குக்கு மோடி அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, கடந்த ஜூனில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போதும் மோடி - ஜின்பிங் சந்திப்பு நடந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இரு நாடுகளும் தங்கள் உறவை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன.

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக மோடி இன்று பிரதமராக பதவியேற்கிறார். இந்நிலையில், ஜின்பிங் உடனான மோடியின் சந்திப்பு குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதற்கு வெளியுறவு துறை  செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் அளித்துள்ள பதிலில், “உஹான் நகரில் நடந்த முதல் சந்திப்பின்போது, 2019ம் ஆண்டில் இந்தியாவிற்கு வருகை தரும்படி ஜின்பிங்குக்கு மோடி அழைப்பு விடுத்தார். அதை சீன அதிபர் ஏற்றுக்கொண்டார். இந்தியாவில் இருவரும் சந்திப்பதற்கான தேதி, இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது” என்றார்.

Tags : Modi - Jinping Meeting , Modi, Jinping, Foreign Ministry
× RELATED காய்ந்து கருகி சருகாகும்...