×

ஆஸி. பிரதமராக மோரிசன் பதவியேற்றார்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடந்த பொதுத்தேர்தலில் 2வது முறையாக ஸ்காட் மோரிசன் வெற்றி பெற்றார். இதையடுத்து, கான்பராவில் நேற்று பதவியேற்பு விழா நடந்தது. இதில், பிரதமராக ஸ்காட் மோரிசனும், துணை பிரதமராக மைக்கேல் மெக்கார்மாக்கும் பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து, புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர். புதிய அமை ச்சரவையில் 7 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் வேளாண்துறை முதல் பெண் அமைச்சர் என்ற பெருமையை பிரிட்கெட் மெக்கென்ஸி பெற்றுள்ளார். மேலும், பழங்குடியின பிரிவை சேர்ந்த எம்பி கென் வியாட் கேபினெட் அமைச்சராகி உள்ளார்.

Tags : Aussie ,Morrison , Australia, Morrison
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...