×

சச்சின் ஆதிக்கம்...

* உலக கோப்பை போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் 45 போட்டியில் 2278 ரன் குவித்து (அதிகம் 152, சராசரி 56.95, சதம் 6, அரை சதம் 15) முதலிடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங் (1743), இலங்கை வீரர் சங்கக்கரா (1532), வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா (1225), தென் ஆப்ரிகாவின் டி வில்லியர்ஸ் (1207) அடுத்த இடங்களில் உள்ளனர்.

* அதிக பவுண்டரி விளாசிய வீரர்கள் பட்டியலிலும் சச்சின் (241) முன்னிலை வகிக்கிறார். சங்கக்கரா (147), பான்டிங் (145), கில்கிறிஸ்ட் (141), பிளெமிங் (134) அடுத்த இடங்களில் உள்ளனர்.

* அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் 6 சதம், பான்டிங், சங்கக்கரா தலா 5 சதம் விளாசி முன்னிலை வகிக்கின்றனர்.

* வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கேல், தென் ஆப்ரிக்காவின் டி வில்லியர்ஸ் தலா 37 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளனர்.

* விக்கெட் வேட்டையில் ஆஸி. வேகம் கிளென் மெக்ராத் (71) முதலிடம் வகிக்கிறார். இலங்கை சுழல் முரளிதரன் (68), பாக். வேகம் வாசிம் அக்ரம் (55), இலங்கையின் சமிந்தா வாஸ் (49), இந்திய வேகங்கள் ஜாகீர் கான், ஜவகல் ஸ்ரீநாத் தலா 44 விக்கெட் வீழ்த்தி அடுத்த இடங்களில் உள்ளனர்.

* ஆஸ்திரேலிய அணி 2015 உலக கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 6 விக்கெட் இழப்புக்கு 417 ரன் குவித்ததே (பெர்த் மைதானம்) அதிக பட்ச ஸ்கோராகும்.

* 2003 உலக கோப்பையில் இலங்கைக்கு எதிராக கனடா அணி 36 ரன்னில் சுருண்டதே (18.6 ஓவரில் ஆல் அவுட்) குறைந்தபட்ச ஸ்கோராகும்.

Tags : Sachin , Sachin Tendulkar, World Cup competition, Ricky Ponting
× RELATED சென்னை பெரம்பூர் பகுதியில் தலைமைக்...