×

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் 19.5 டி.எம்.சி. நீரைத் திறக்க தமிழகம் வலியுறுத்தாதது ஏன்? வைகோ கேள்வி

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் 19.5 டி.எம்.சி. நீரைத் திறக்க தமிழகம் வலியுறுத்தாதது ஏன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரி ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன், கர்நாடகாவிலிருந்து காவிரியில் விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு வெளிவந்த பிறகு நேற்று கர்நாடகா நீர்ப் பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த கோடை மழை இல்லாததாலும், கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதாலும் விவசாயம் மற்றும் குடிநீருக்கு நீர் தேவைப்படுவதாலும் தமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி. தண்ணீர் எப்படி திறக்க முடியும்? என்று கூறி இருக்கிறார்.

மேலும், கர்நாடகா அணைகளுக்கு தண்ணீர் வரத்தை அடிப்படையாகக் கொண்டு, தண்ணீர் திறக்க வேண்டும் என்றுதான் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறவில்லை. தென்மேற்கு பருவமழை தொடங்கும்பொழுது கர்நாடக அணைகளுக்கு எதிர்பார்க்கும் நீர் வரத்து இருந்தால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்று. கர்நாடக அரசு தண்ணீர் திறக்கப்போவதில்லை என்பது இதிலிருந்து உறுதியாகத் தெரிகிறது. கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து மே மாதம் வரையில் தமிழகத்திற்கு 19.5 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிட்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டுக்குத் திறக்க வேண்டிய நிலுவைத் தண்ணீரை முழுமையாக அளிக்க வேண்டும் என்று காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தாதது ஏன்? மேட்டுர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் இந்த ஆண்டும் ஜூன் 12ம் தேதி குறுவைச் சாகுபடிக்குத் தண்ணீர் திறப்பதற்கு முடியாத சூழல் நிலவுகிறது.


Tags : meeting ,Cauvery Management Commission ,Tamils , Cauvery Management, 19.5 TMC Water, open to Tamilnadu, why not stress? Vaiko, question
× RELATED வறட்சி நீடித்து வருவதால்...