×

பிஇ கவுன்சலிங், டான்செட்டுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

சென்னை: இன்ஜினியரிங் கவுன்சலிங், டான்செட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இன்ஜினியரிங் கவுன்சலிங்கில் பங்கேற்பதற்கு இணையதளத்தில் விண்ணப்பித்தல் மே 2ம் தேதி தொடங்கியது. www.tndte.gov.in, www.tneaonline.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இன்ஜினியரிங் கவுன்சலிங்குக்கு விண்ணப்பிக்க மே 31ம் தேதி (நாளை) கடைசி நாளாகும்.

சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதிம், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 3ம் தேதிம் கவுன்சலிங் தொடங்குகிறது. ஜூலை 30ம் தேதிக்குள் இன்ஜினியரிங் கவுன்சலிங்கை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இன்ஜினியரிங் கவுன்சலிங் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு, விண்ணப்பித்தல் தேதியை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் மற்றும் தொழில்சார் படிப்புகளான எம்பிஏ, எம்சிஏ மாணவர் சேர்க்கைக்கு அண்ணா பல்கலைக்கழகம் டான்செட் நுழைவுத்தேர்வு நடத்திவருகிறது. டான்செட் நுழைவுத்தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பித்தல் மே 8ம் தேதி தொடங்கியது. நேற்று மாலை வரை எம்பிஏ படிக்க 19,963 பேரும், எம்சிஏ படிக்க 5,564 பேரும் முதுநிலை இன்ஜினியரிங் படிப்புகளுக்கு 12,815 பேர் என மொத்தம் 38,342 பேர் விண்ணப்பித்துள்ளனர். டான்செட் நுழைவுத்தேர்வுக்கு விணணப்பிக்க மே 31ம் தேதி(நாளை) நாளாகும்.

Tags : Pse , BE Counseling, Dancet, Apply, Tomorrow, Last
× RELATED மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட...