×

பெங்களூரு ஐ.பி.எஸ் அதிகாரி பதவி விலகல்: சமூகப் பணியில் ஈடுப்பட முடிவு

பெங்களூரு: பெங்களூருவில் குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் காவல் பணியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். பெங்களூரில் காவல்துறை துணை ஆணையராக அண்ணாமலை பதவி வகித்து வந்தார். கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தை சேர்ந்த இவர், 9 ஆண்டுகளுக்கு முன்  ஐ.பி.எஸ் ஆகத் தேர்வு பெற்று கர்நாடகக் காவல் பணியில் சேர்ந்தார். கர்கலா பகுதியின் கூடுதல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட இவர் உடுப்பி,சிக்மகளூர் ஆகிய இடங்களில் கண்காணிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். உடுப்பியில் இருந்து அவரை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டபோது, அதனை எதிர்த்து மக்கள் போராட்டங்களை நடத்தினர். பணிபுரிந்த இடங்களில் எல்லாம் குற்றங்களை ஒழிப்பதில் அதிரடி காட்டியதால் மக்களின் நன்மதிப்பை பெற்றார்.

நேர்மையான அதிகாரியாக வலம் வந்த அவரை கர்நாடகாவின் சிங்கம் என்றும் அன்புடன் அழைத்து வந்தனர். இந்நிலையில் நண்பர்களுக்காக அவர் வெளியிட்டுள்ள  செய்தியில் தாம் காவல் பணியில் இருந்து விலகுவதாகவும், அதற்கான கடிதத்தை சமர்பித்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு மானசரோவர் யாத்திரை சென்றபோது வாழ்வின் திருப்பத்தை உணர்ந்ததாகவும், தன்னுடன் பணியாற்றிய மதுகர் ஷெட்டி என்பவரின் திடீர் மறைவு தனது வாழ்க்கையை சுயபரிசோதனை செய்யும் அவசியத்தை உணர்த்தியதாகவும் அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார். தீர ஆராய்ந்த பின்னரே இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறும் அண்ணாமலை, தன்னால் முடிந்த நற்காரியங்களை இந்த சமூகத்திற்கு செய்யவும்,சில காலம் குடும்பத்தினருடன் செலவிடவும் திட்டமிட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


Tags : IPS ,Bangalore , Bengaluru, IPS officer, post, dissociation, social work, decision
× RELATED இடஒதுக்கீட்டில் ஐபிஎஸ் ஆன...