×

ஈரோடு அருகே கோபிச்செட்டிப்பாளையத்தில் விடிய விடிய கனமழை: 11,500 நெல் மூட்டைகள் சேதம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் பெய்த திடீர் மழையால் கூகலூர் அரசு நெல் கொள்முதல் மையத்தில் விற்பனைக்காக வைத்திருந்த 11,500 நெல் மூட்டைகள் சேதம் அடைந்துவிட்டன. கூகலூர், மேவாணி, கரண்டிப்பாளையம்,முடச்சூர்,கரட்டூர்,கள்ளிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் கூகலூரில் கடந்த வாரம் தொடங்கப்பட்ட அரசு நெல் கொள்முதல் மையத்தில் விற்பனைக்காக விவசாயிகள் வைத்திருந்த 11,500 மூட்டை நெல் முற்றிலும் நனைந்து வீணாகிவிட்டது.

நாளொன்றுக்கு 800 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் 15 நாட்கள் வரை காத்திருக்கும் நிலை உள்ளதாக கோபி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். நெல் மூட்டைகள் சேதம் குறித்து மாவட்ட ஆட்சியர் கதிரவனிடன் முறையிட்ட விவசாயிகள் கொள்முதல் அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு முறையிட்டனர். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட ஆட்சியர் நாளொன்றுக்கு 700 நெல் மூட்டைகளை கூடுதலாக கொள்முதல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.


Tags : Gopichettipalayam ,Erode , Erode, Gobichettipalayam, heavy rainfall, 11,500 rice bags, damage
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...