×

போடி அருகே ஓபிஎஸ் மகன் கார் மீது கல்வீச்சு: கண்ணாடிகள் உடைந்தன

போடி: போடி அருகே வாக்குச்சாவடி மையத்தை பார்வையிடச் சென்ற துணை முதல்வர் ஓபிஎஸ்சின் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத்தின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், போடி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இங்கு வாக்காளர்களுக்கு ெபருமளவில் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார்கள் எழுந்தன. நேற்று ஓட்டுப்பதிவு நடந்த நிலையில், பல வாக்குச்சாவடிகளுக்கு அருகில் பூத் சிலிப் கொடுக்கும்போது, அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தனர். இதை கண்டித்து திமுகவினர் மறியல் செய்தனர். இந்நிலையில், போடி அருகே, அம்மாபட்டி ஊராட்சி, பெருமாள்கவுண்டன்பட்டி கிராமத்திற்கு நேற்று பிற்பகல் 3 மணி அளவில் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் மகனும் தேனி தொகுதி எம்பியுமான ரவீந்திரநாத், ஆதரவாளர்களுடன் 2 கார்களில் வந்து பார்வையிட்டார். அங்கிருந்து புறப்பட்டபோது, அவர்களை 7 பேர் பின்தொடர்ந்து வந்து, இரு கார்களிலும் கற்களை வீசினர். இதில் கார் கண்ணாடிகள் சேதமடைந்தன. இதனால், கார்களை நிறுத்திவிட்டு, அதிமுகவினர் வீட்டில் எம்பி உள்பட அனைவரும் தஞ்சமடைந்தனர்.இதையடுத்து அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த எஸ்பி சாய்சரண் தேஜஸ், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியபின் அவர்கள் மறியலை கைவிட்டனர்.  விசாரணையில், அமமுகவைச் சேர்ந்த 7 பேர் குடிபோதையில் எம்பி கார் மீது கல் வீசியதாக தெரிய வந்தது. இளைய மகனுக்கும் எதிர்ப்பு: போடி   தொகுதிக்குட்பட்ட தேனி அருகே, தர்மாபுரி கிராமத்தில் உள்ள   வாக்குச்சாவடி மையங்களுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ்சின் 2வது மகன் ஜெயபிரதீப் கட்சி   நிர்வாகிகளுடன் வந்தார். அப்போது திமுகவினர் ஓபிஎஸ்சுக்கு எதிராகவும், ஜெயப்பிரதீப்புக்கு எதிராகவும் கோஷமிட்டனர். இதனால் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். எம்எல்ஏ கார் கண்ணாடி உடைப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட காரகுப்பம் ஊராட்சி எமக்கல்நத்தம்  ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் கள்ள ஓட்டு புகார் தொடர்பாக திமுக, அதிமுக முகவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  தகவலறிந்து வந்த பர்கூர் எம்எல்ஏ ராஜேந்திரன் கார் கண்ணாடியை சிலர் கல்லால் அடித்து உடைத்தனர்.மண்டை உடைப்பு: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவலில்  அதிமுக, அமமுகவினர் மோதிக்கொண்டதில் அமமுகவை சேர்ந்த 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதுபோன்று புழுதிகுளம் வாக்குச்சாவடியில் ஏற்பட்ட தகராறில் அதிமுகவினர் தாக்கியதில் அமமுகவை சேர்ந்த ஓருவரின் மண்டை உடைந்தது….

The post போடி அருகே ஓபிஎஸ் மகன் கார் மீது கல்வீச்சு: கண்ணாடிகள் உடைந்தன appeared first on Dinakaran.

Tags : OPS ,Bodi ,Honey ,Rabindra Nath ,Bodie ,Dinakaran ,
× RELATED ஆர்.பி.உதயக்குமாருக்கு ஓபிஎஸ் அணி எச்சரிக்கை: அஞ்ச மாட்டேன் என பதிலடி