×

பார் உரிமையாளர் தீக்குளித்த சம்பவத்தின் எதிரொலி: காஞ்சிபுரத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 101 பார்கள் மூடல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிய 100க்கும் மேற்பட்ட டாஸ்மார்க் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் டி.எஸ்.பி அலுவலகம் முன்பாக, பார் உரிமையாளர் நெல்லையப்பன் என்பவர் நேற்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பார் உரிமையாளர் ஒவ்வொரு மாதமும் திருப்போரூர் காவல் ஆய்வாளருக்கும், மாமல்லபுரம் டி.எஸ்.பி க்கும் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து பாரினை அனுமதி இல்லாமல் நடத்தி வருவதாகவும், இதுதொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் மாமல்லபுரம் டி.எஸ்.பி அலுவலகம் முன்பாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

அவரை அங்குள்ளவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்கைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நெல்லையப்பன் உயிர் இழந்தார். இந்த விவகாரத்தை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 106 மதுபான பார்களில் 5 பார்கள் மட்டுமே முறையான அனுமதி பெற்றவை என்றும், மீதமுள்ள 101 மதுபான பார்கள் அனுமதியின்றி செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் இயங்கி வரும் அனைத்து பார்களையும் மூட எஸ்.பி உத்தரவிட்டார்.

அதுமட்டுமில்லாமல் எஸ்.பி அலுவலகம் முன்பு தீக்குளித்த நெல்லையப்பன் உயிரிழந்ததால் திருப்போரூர் காவல் ஆய்வாளர் கண்ணன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மாமல்லபுரம் டி.எஸ்.பி சுப்புராஜ் தற்போது விடுப்பில் இருப்பதாகவும் மீண்டும் பணியில் சேர்ந்த பின்பு அவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தற்போது திடீர் அவசர ஆலோசனைக் கூட்டம் எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 34 காவல் நிலையத்திலிருந்து அனைத்து பிரிவு போலீசாரும் பங்கேற்றுள்ளனர்.


Tags : Echo ,fire owner ,Kanchipuram , Kanchipuram, bar owner, fire, illegal, bar, closure
× RELATED குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து