×

கன்னியாகுமரி தொகுதி எம்.பி-யாக தேர்வானதையடுத்து நாங்குநேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் வசந்தகுமார்

கன்னியாகுமரி: நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் திமுக போட்டியிடுமா என்பதை காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு செய்யும் என கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி எம்எல்ஏவாக இருந்த ஹெச் வசந்தகுமார் போட்டியிட்டார். பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட வசந்தகுமார் அமோக வெற்றிபெற்றார். கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார், தான் வகித்து வந்த நாங்குநேரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக இன்று காலை சட்டப்பேரவை தலைவர் தனபாலை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

வசந்தகுமாரின் ராஜினாமாவை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் பலம் 8- லிருந்து 7-ஆக குறைந்துள்ளது. இந்த நிலையில் நாங்குநேரி தொகுதி காலியாக உள்ளதால் அங்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் முயற்சிக்கும் என வசந்தகுமார் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் திமுக போட்டியிடுமா என்பதை காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்யும் என்று கூறினார். வசந்தகுமார் தனது எம்எல்ஏ பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து நாங்குநேரி தொகுதி காலியாக உள்ளது. இதையடுத்து, நாங்குநேரி காலியான தொகுதி என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Nageshari MLA ,constituency ,Kanyakumari , Kanyakumari constituency MP, Vasanthakumar, MLA, post, resignation
× RELATED நள்ளிரவு வரை வந்திறங்கிய வாக்கு பெட்டிகள்