×

கோபி அருகே தனியார் நிதி நிறுவனம் முன்பு குழந்தையுடன் பெண் தர்ணா

கோபி: கோபியில் தனியார் நிதி நிறுவனத்தை கண்டித்து குழந்தையுடன் பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அக்கரை கொடிவேரியை சேர்ந்தவர் கருப்புசாமி (41). இவர், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு சரக்கு ஆட்டோ ஒன்றை, கோபி சரவணா தியேட்டர் சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 லட்சம் கடன் பெற்றுள்ளார். கடன் வாங்கிய மூன்று மாதத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக கருப்புசாமி இறந்துவிட்டார். இதனால், அவருக்கு இழப்பீடாக ரூ.1.91 லட்சம் கிடைத்தது. அந்த பணம் முழுவதும் தனியார் நிதி நிறுவன கடனுக்காக அவரது மனைவி உமாமகேஸ்வரி செலுத்தி உள்ளார்.

அதன் பின்னரும் வாகன கடனாக ரூ.13 ஆயிரம் செலுத்த வேண்டி உள்ளதாக கூறி கடந்த ஆண்டு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கருப்புசாமி வீட்டிற்கு சென்று வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, உமாமகேஷ்வரி நிலுவை தொகை மற்றும் அபராத தொகையாக ரூ.20 ஆயிரம் செலுத்த வந்த போது தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் பணத்தை வாங்க மறுத்ததோடு வாகனத்தையும் தர மறுத்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த உமாமகேஷ்வரி தனது குழந்தையுடன் நிதி நிறுவன வாசலில் அமர்ந்து நேற்று தர்ணாவில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த கிளை மேலாளர் கார்த்திக், உமாமகேஷ்வரியிடம் பேச்சு நடத்தினார். பறிமுதல் செய்த வாகனத்தை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து அந்த பெண் போராட்டத்தை கைவிட்டார். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : institution ,baby ,Gopi ,darana , Kopi, private financial company, female, sit
× RELATED பச்சிளம் ஆண் குழந்தை கொல்லப்பட்ட...