×

கும்பகோணம் கொட்டையூரில் குடிநீர் பஞ்சம்: பொதுமக்கள் சாலை மறியல்

கும்பகோணம்:  கும்பகோணம் மேலக்கொட்டையூர் 1-வது வார்டுக்குட்பட்ட தெருக்களில் கடந்த சில நாட்களாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் கும்பகோணம் நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனாலும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மேலக்கொட்டையூர் பகுதியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கொட்டையூரில் கடந்த 3 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லை என்பது புகார்,  இது குறித்து நகராட்சிக்கு பலமுறை புகார் அளித்தும் பயன் இல்லாததால் காலிக்குடங்களுடன் திரண்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் இது குறித்து உதவி கலெக்டர், கும்பகோணம் நகராட்சி ஆணையர் ஆகியோருடன் செல்போன் மூலம் பொதுமக்களின் குறைகளை எடுத்து கூறினார். குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று கும்பகோணம் வட்டாட்சியர் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் தர்காலிகமாக விளக்கிக்கொள்ளப்பட்டது.  இந்த மறியல் போராட்டத்தால் கும்பகோணம்-சுவாமிமலை சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால், கும்பகோணம் நடராட்சியை முற்றுகை இட இருப்பதாக கொட்டையூர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.




Tags : blockade ,Kumbakonam ,road , Kumbakonam, Melakkottaiyur, drinking water famine, civilians, road stroke
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...