×

மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு விடுத்ததாக செய்தி பரப்பியது யார்?: பாஜக செய்தித்தொடர்பாளர் ட்வீட்

சென்னை: மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்ததாக செய்தி பரப்பியது யார்? என பாஜக செய்தித் தொடர்பாளர் தி.நாராயணன் தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். நாடு முழுவதும் நடைபெற்ற 17வது மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களில் அமோக வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதன் காரணமாக 2வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேக உள்ளார். நாளை நடைபெற உள்ள இந்த பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க பல்வேறு கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டு அதிபர்கள் மற்றும் திரையுலக நடிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நட்பு ரீதியின் அடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என பாஜக வட்டாரத்தில் தகவல் வெளியானது.

இதற்கிடையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இதனை முற்றிலும் மறுத்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்ய தலைவர் கமலுக்கு அழைப்பு விடுத்ததாக செய்தி பரப்பியது யார்?, பொய் செய்திகளை சொல்லிக் கொண்டிருந்தவர்கள், பொய்யையே செய்தியாக சொல்கிறார்களே?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிலையில், 2-வது முறையாக நாளை பிரதமராக மோடி பதவியேப்பை முன்னிட்டு குடியரசு தலைவர் மாளிகையில் விழா ஏற்பாடு தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் உலக நாட்டுத் தலைவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய பிரமுகர்களும் திரை பிரபலங்களும் பங்கேற்கின்றனர்.

Tags : Modi ,ceremony ,Kamal ,BJP , Modi, swearing-in ceremony, Kamal, call, BJP spokesperson, tweet
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா