×

கர்நாடகாவை கலக்கிய தமிழக ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை ராஜினாமா

பெங்களூரு: நேர்மையான, அதிரடியான அதிகாரி பெயர் பெற்ற தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இது, கர்நாடகா போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரை சேர்ந்தவர் அண்ணாமலை. கோயம்புத்தூரில் பள்ளி படிப்பை முடித்த இவர், 2011ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். 2 ஆண்டுகள் பயிற்சி பெற்ற இவர், 2013ம் ஆண்டு முதன் முறையாக கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம் கார்கலாவில் ஏஎஸ்பி.யாக பதவியேற்றார். நேர்மையுடன் செயல்பட்ட இவர், கிரிமினல் குற்றங்களை தடுப்பதில் மிகவும் தீவிரம் காட்டி வந்தார். நீண்ட நாட்கள் சிக்கமகளூருவில் எஸ்.பியாக பணியாற்றிய அவர்,  கடந்தாண்டு பெங்களூரு தென் மண்டல டிசிபி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

பதவியேற்ற சில நாட்களிலேயே காவல் நிலையம் ஒன்றில் அலட்சியமாக செயல்பட்ட 40 காவலர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்தார். இந்த நடவடிக்கையால் அண்ணாமலையின் புகழ் மாநிலம் முழுவதும் பரவியது. சக ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடையே அவருக்கு நன்மதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கர்நாடகா முதல்வர் குமாரசாமியை நேற்று சந்தித்த அண்ணாமலை, சொந்த வாழ்க்கையில் ஏராளமான பணிகள் இருப்பதாக கூறி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். அப்போது, முதல்வரும் அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்துள்ளார். ஆனால், தான் எடுத்த முடிவில் இருந்து அவர் பின்வாங்கவில்லை.

Tags : Annamalai ,Karnataka ,IPS , Karnataka, Tamilnadu IPS, officer, Annamalai, resign
× RELATED தேர்தல் விதிகளை மீறியதாக கோவை தொகுதி...