உலக கோப்பையில் இதுவரை இந்தியா...

உலக கோப்பையில் இந்தியா 2 முறை பட்டம் வென்றுள்ளது. இதுவரை நடைபெற்ற 11 உலக கோப்பை போட்டிகளில் முதல் 3 தொடர்கள் 60 ஓவர் போட்டிகளாகவும், மீதி தொடர்கள் 50 ஓவர் போட்டிகளாகவும் நடைபெற்று வருகின்றன. இருவகை போட்டியிலும் கோப்பை வென்ற ஒரே அணி என்ற பெருமை என்றும் இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமானது. இப்படி பல சாதனைகளை படைத்துள்ள இந்திய அணி உலக கோப்பையில் பெற்ற வெற்றி/தோல்விகள்...

முதல் உலக கோப்பை (1975)
* இங்கிலாந்திடம் 202 ரன் வித்தியாசத்தில் தோல்வி.
* கிழக்கு ஆப்ரிக்காவிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
* நியூசிலாந்திடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
* 8 நாடுகள் பங்கேற்ற தொடரில் இந்தியாவுக்கு 6வது இடம்.
அணி: வெங்கட்ராகவன் (கேப்டன்), பிஷன்சிங் பேடி, கெயிக்வாட், பிரிஜேஷ், சோல்கர், பரூக் என்ஜினியர் (விக்கெட் கீப்பர்), ஜி.விஸ்வநாத், காவ்ரி, மதன்லால், மொகிந்தர், கவாஸ்கர், பித் அலி.

2வது உலக கோப்பை (1979)
* வெ.இண்டீசிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
*  நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
*  இலங்கையிடம் 47 ரன் வித்தியாசத்தில் தோல்வி.
* 8 நாடுகள் பங்கேற்ற தொடரில் இந்தியாவுக்கு7வது இடம்.
அணி: வெங்கட்ராகவன் (கேப்டன்), கவாஸ்கர், கெயிக்வாட், பரத் ரெட்டி, பேடி, பிரிஜேஷ், வெங்சர்கார், ஜி.விஸ்வநாத், கபில்தேவ், காவ்ரி, மொகிந்தர், சுரிந்தர் கன்னா, யஷ்பால் சர்மா.

3வது உலக கோப்பை (1983)
* வெ.இண்டீசிடம் 34ரன் வித்தியாசத்தில் வெற்றி.
* ஜிம்பாப்வேயிடம் 5விக்கெட் வித்தியாத்தில் வெற்றி.
* ஆஸ்திரேலியாவிடம் 162 ரன் வித்தியாத்தில் தோல்வி.
* வெ.இண்டீசிடம் 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி.
* ஜிம்பாப்வேயிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
* ஆஸ்திரேலியாவிடம் 118 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
* அரையிறுதியில் இங்கிலாந்திடம் 6விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
* பைனலில் வெ.இண்டீசிடம்  43 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
* 8 நாடுகள் பங்கேற்ற தொடரில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பையை முத்தமிட்டது.
அணி: கபில்தேவ் (கேப்டன்), கவாஸ்கர், பல்விந்தர் சிங், வெங்சர்கார், கீர்த்தி ஆசாத், கே.ஸ்ரீகாந்த், மதன்லால், மொகிந்தர், ரவி சாஸ்திரி, ஆர்.பின்னி,  சந்தீப் பாட்டீல், வால்சன், கிர்மானி, யஷ்பால்.

4வது உலக கோப்பை(1987)
* ஆஸ்திரேலியாவிடம் ஒரு ரன்னில் தோல்வி.
* நியூசிலாந்திடம் 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
* ஜிம்பாப்வேயிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
* ஆஸ்திரேலியாவிடம் 56 ரன் வித்தியாத்தில் வெற்றி.
* ஜிம்பாப்வேயிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
* நியூசிலாந்திடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
* அரையிறுதியில் இங்கிலாந்திடம் 35 ரன்னில் தோல்வி
அணி: கபில்தேவ் (கேப்டன்), வெங்சர்கார், சந்திரகாந்த், சேத்தன் சர்மா, கிரண் மோரே, கே.ஸ்ரீகாந்த், எல்.சிவராமகிருஷ்ணன், மனீந்தர், பிரபாகர்,  அசாருதீன், சித்து, சாஸ்திரி, பின்னி, கவாஸ்கர்.

5வது உலக கோப்பை(1992)
* இங்கிலாந்திடம் 9 ரன்னில் தோல்வி.
* இலங்கையுடனான போட்டி கைவிடப்பட்டது.
* ஆஸ்திரேலியாவிடம் ஒரு ரன்னில் தோல்வி.
* பாகிஸ்தானை 48 ரன்களில் வீழ்த்தியது.
* ஜிம்பாப்வேயை 55 ரன்னில் வீழ்த்தியது
* வெ.இண்டீசிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
* நியூசிலாந்திடம் 4 விக்கெட் வித்தியாத்தில் தோல்வி
* தென் ஆப்ரிக்காவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
* லீக் சுற்றுடன் நாடு திரும்பியது.
அணி: அசாரூதீன் (கேப்டன்), சாஸ்திரி, அஜய் ஜடேஜா, ஜவகல் ஸ்ரீநாத், கபில்தேவ், கிரண் மோரே, கே.ஸ்ரீகாந்த், பிரபாகர், ஆம்ரே, சச்சின், மஞ்ரேகர்,  சுபர்தோ பானர்ஜி, வெங்கடபதி ராஜு, காம்ப்ளி.

6வது உலக கோப்பை(1996)
* கென்யாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
* வெ,இண்டீசிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
* ஆஸ்திரேலியாவிடம் 16 ரன் வித்தியாசத்தில் தோல்வி.
* இலங்கையிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
* ஜிம்பாப்வேயிடம் 40 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
* காலிறுதியில் பாகிஸ்தானிடம் 39ரன் வித்தியாசத்தில் வெற்றி.
* இலங்கையுடனான அரையிறுதியில் இந்திய வீரர்களின் மோசமான ஆட்டத்தால் தோல்வி உறுதியானது. ரசிகர்கள் ரகளையில் இறங்க, ஆட்டம் நிறுத்தப்பட்டு இலங்கை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
அணி: அசாரூதீன் (கேப்டன்),  சச்சின், ஆசிஷ் கபூர், அஜய் ஜடேஜா, அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத், பிரபாகர், சித்து, மோங்கியா, சலில் அங்கோலா,  மஞ்ரேகர், வெங்கடபதி ராஜு, வி.பிரசாத், காம்ப்ளி,

7வது உலக கோப்பை (1999)
* தென் ஆப்ரிக்காவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
* ஜிம்பாப்வேயிடம் 3 ரன் வித்தியாசத்தில் தோல்வி.
* கென்யாவிடம் 94ரன் வித்தியாசத்தில் வெற்றி.
* இலங்கையிடம் 157 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
* இங்கிலாந்திடம் 63 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
 சூப்பர் சிக்ஸ் சுற்று:
* ஆஸ்திரேலியாவிடம் 77ரன் வித்தியாசத்தில் தோல்வி.
* பாகிஸ்தானிடம் 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
* நியூசிலாந்திடம் 5விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
* சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குள் இந்தியா நுழைந்தது. அங்கு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அத்தடன் நடையை கட்டியது.
அணி: அசாரூதீன் (கேப்டன்), அஜய் ஜடேஜா, அஜித் அகர்கர், அமே கவுரசியா, அனில் கும்ப்ளே, மொகாந்தி, ஸ்ரீநாத், மோங்கியா, நிகில் சோப்ரா, டிராவிட், ராபின் சிங், சச்சின், சடகோபன் ரமேஷ், கங்குலி, வி.பிரசாத்.

8வது உலக கோப்பை(2003)
* நெதர்லாந்திடம் 68ரன் வித்தியாசத்தில் வெற்றி.
* ஆஸ்திரேலியாவிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
* ஜிம்பாப்வேயிடம் 83 ரன் வி்த்தியாசத்தில் வெற்றி.
* நமீபியாவிடம் 181 ரன் வித்தியாத்தில் வெற்றி.
* இங்கிலாந்திடம் 82 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
* பாகிஸ்தானிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
சூப்பர் சிக்ஸ் சுற்று:
* கென்யாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
* இலங்கையிடம் 183 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
* நியூசிலாந்திடம் 7 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி.
* அரையிறுதியில் கென்யாவிடம் 91 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
* இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 125ரன் வித்தியாசத்தில் தோல்வி.
* 2வது இடத்துடன் திருப்தியடைந்தது இந்தியா.
அணி: கங்குலி (கேப்டன்), டிராவிட், அகர்கர், கும்ப்ளே, நெஹ்ரா, மோங்கியா, ஹர்பஜன், ஸ்ரீநாத், கைப், பார்த்திவ், சச்சின், சஞ்ஜெய் பாங்கர், சேவாக், யுவராஜ், ஜாகீர்.

9வது உலக கோப்பை (2007)
* வங்கதேசத்திடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
* பெர்முடாவிடம் 257ரன் வித்தியாசத்தில் வெற்றி.
* இலங்கையிடம் 69 ரன் வித்தியாசத்தில் தோல்வி.
* முதல் முறையாக 16 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.
அணி: டிராவிட் (கேப்டன்), சச்சின், அகர்கர், கும்ப்ளே, கார்த்திக், ஹர்பஜன், இர்பான், டோனி, முனாப், உத்தப்பா, ஸ்ரீசாந்த், சேவாக், யுவராஜ், ஜாகீர்.

10வது உலக கோப்பை(2011)
* வங்கதேசத்திடம் 87 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
* இங்கிலாந்துடனான போட்டி ‘டை’ ஆனது.
* அயர்லாந்திடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
* நெதர்லாந்திடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
* தென் ஆப்ரிக்காவிடம் 3 விக்கெட் வித்தியாத்தில் தோல்வி.
* வெஸ்ட் இண்டீசிடம் 80 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
* காலிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
* அரையிறுதியில் பாகிஸ்தானிடம் 29 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
* இறுதிப் போட்டியில் இலங்கையிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
* அதிரடியாக விளையாடிய டோனி தலைமையிலான இந்திய அணி 2வது முறையாக உலக கோப்பையை வசமாக்கியது
அணி: டோனி (கேப்டன், சேவாக், நெஹ்ரா, கம்பீர், ஹர்பஜன், முனாப்,  சாவ்லா, ஆர்.அஸ்வின், சச்சின், ஸ்ரீசாந்த், ரெய்னா, கோஹ்லி, யூசுப் பதான், யுவராஜ், ஜாகீர்.

11வது உலக கோப்பை(2015)
* பாகிஸ்தானிடம் 76 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
* தென் ஆப்ரிக்காவிடம் 130 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
* ஐக்கிய அரபு அமீரகத்திடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
* வெ.இண்டீசிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
* அயர்லாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
* ஜிம்பாப்வேயிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
* காலிறுதியில் வங்க தேசத்திடம் 109 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
* அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் 95 ரன் வித்தியாசத்தில் தோல்வி.
* லீக் சுற்றிலிருந்து ஒரு போட்டியில் கூட தோற்காத இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. மீண்டும் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் ஏமாற்றத்துடன் வெளியேறியது.
அணி: டோனி (கேப்டன்), கோஹ்லி, ரகானே, ராயுடு, அக்சர் பட்டேல், புவனேஷ்வர், ஷமி, மோகித் சர்மா, ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ரோகித், தவான், ஸ்டூவர்ட் பின்னி, ரெய்னா, உமேஷ்.

Tags : World Cup ,India , World Cup, So far, India ...
× RELATED ரக்பி உலகக் கோப்பையை வென்று நாடு...