×

காஷ்மீர் வனப்பகுதியில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ளது கோகர்நாக். இங்குள்ள கச்சுவான் வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்கள் அளித்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர்.

அந்த வனப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில், 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்று அறிய தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

Tags : terrorists ,Kashmir Valley , Kashmir Forest, 2 terrorists, shot dead
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...