×

4 மாதங்களாக குடிநீர் வினியோகமின்றி அவதி காலி குடங்களுடன் பொதுமக்கள் பி.டி.ஓ. அலுவலகத்தில் முற்றுகை: ஆரணி அருகே பரபரப்பு

ஆரணி: ஆரணி அருகே 4 மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் பிடிஓ அலுவலகத்தை  முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அத்திமலைப்பட்டு ஊராட்சியில் 300க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசதித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்து வந்துள்ளனர்.இந்நிலையில் கடும் வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து ஆழ்துளை கிணற்றில் தண்ணீர்  வராமல் நின்றுள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு கடந்த 4 மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்வதில்லையாம். இதுகுறித்து ஊராட்சி செயலாளர் ரமேசிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கடந்த 21ம் தேதி மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிடிஓ சவிதாவிடம் புகார் தெரிவித்தனர். அப்போது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும்  2 கி.மீ வரை சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்துவதால் பொதுமக்கள் கடும் சீரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பிடிஓ, ஊராட்சி செயலாளரிடம் புகார் தெரிவித்தும்  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் நேற்று மேற்கு ஆரணி பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, பிடிஓ இல்லாததால் அங்கிருந்த அதிகாரிகள் பிடிஓ வந்தவுடன் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்லாமல் பிடிஓ அலுவலகம்  முன் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து 5 மணி நேரம் கழித்து வந்த பிடிஓவிடம் பொதுமக்கள் குடிநீர் பிரச்னை குறித்து தெரிவித்தனர். அதற்கு 2 நாட்களில் குடிநீர் பிரச்னையை சரிசெய்வதாக தெரிவித்தார். அதனை ஏற்ற கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.



Tags : civilians ,BDO Siege , Drinking water,empty huts, Pitio,office
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை