×

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு 29ம் தேதி முதல் ஹால்டிக்கெட்

சென்னை: பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் இன்று முதல் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை  அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக, ஜூன் மாதம் சிறப்பு துணைத் தேர்வு நடக்க உள்ளது. இந்த துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தட்கல் முறையின் கீழ் விண்ணப்பித்த  மாணவர்களும் இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in  என்ற இணைய தளத்தின் மூலம் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித்தேர்வர்களாக விண்ணப்பித்த மாணவர்கள்  மேற்கண்ட இணைய தளத்தில் நுழைந்து ஹால்டிக்கெட் என்ற வாசகத்தை கிளிக் செய்து தங்கள் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பழைய நடைமுறையின் கீழ் (மொத்த மதிப்பெண்கள் 1200) தேர்வு எழுதும் மாணவர்கள் பழைய முறை என்ற வாசகத்தை கிளிக் செய்து  பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

மார்ச் மாத தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்து தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு வராமல் விட்ட மாணவர்கள் மார்ச் மாத தேர்வுக்காக வழங்கப்பட்ட பதிவு எண், பிறந்த தேதியை பதிவு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் ெசய்து கொள்ளலாம். புதிய முறையின் கீழ் (மொத்த மதிப்பெண்கள் 600) தேர்வு எழுதுவோர் மேற்கண்ட முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஜூன் மாதம் நடக்கும் துணைத் தேர்வு எழுத நேரடியாக விண்ணப்பித்தவர்கள் தமது விண்ணப்ப எண், பிறந்த  தேதியை பதிவு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தமக்கு ஒதுக்கியுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரிடம் தெரிந்து கொள்ள வேண்டும். துணைத் தேர்வுக்கான அட்டவணையை  தேர்வுத்துறை இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


Tags : sub-examinations , Plus 2 ,accessory, From 29th ,Haltitet
× RELATED 10,11,12ம் வகுப்பு துணை தேர்வின் போது...