சென்னை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: சென்னை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் போக்சோ வழக்கறிஞர் பணிக்கு விணணப்பிக்கலாம் என்று சென்னனை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக அரசின் ஆணையின்படி சென்னை மாவட்டத்தில் உள்ள குழந்தைகளை பாலியில் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் (போக்சோ சட்டம்) பதவிக்கால முறையில் அரசு வழக்கறிஞராக (குற்றவியல் மற்றும் உரிமையியல்) பணியாற்ற தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதற்கான மாவட்ட நடுவர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியரின் அறிவிக்கை மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவற்றை www.chennai.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் மாவட்ட நடுவர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர், சிங்காரவேலர் மாளிகை, எண் 62, ராஜாஜி சாலை, சென்னை - 600 001 என்ற முகவரியில் ஜூன் 15ம் தேதி மாலை 5.45 மணிக்குள் வரை பெறப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் கூறினார். இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

× RELATED கருணை அடிப்படையில் வேலை கிடைப்பதில்...