பிரணாப் முகர்ஜியிடம் ஆசி பெற்றார் மோடி

புதுடெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நரேந்திர மோடி நேற்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார். முன்னாள் ஜனாதிபதியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜியை மோடி நேற்று சந்தித்தார். 2வது முறையாக தேர்தலில் பாஜ வெற்றி பெற்று பிரதமராக மோடி நாளை பதவியேற்க உள்ள நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அப்போது, பிரணாப்பிடம் வாழ்த்து பெற்ற மோடி, இருவரும் சேர்ந்து நிற்கும் படத்தையும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘முன்னாள் ஜனாதிபதி பிராணப் முகர்ஜி உடனான சந்திப்பு மிக சிறப்பான அனுபவத்தை தந்துள்ளது. அவரது அறிவுத்திறன் ஈடு இணையற்றது. சிறந்த ராஜதந்திரியான அவர், நாட்டுக்கு சிறப்பான பங்களிப்பை ஆற்றியுள்ளார். இந்த சந்திப்பின் போது பிராணப் முகர்ஜியிடம் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டேன்’ என மோடி கூறியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் மோடி தலைமையிலான பாஜ அரசு, பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Modi ,Pranab Mukherjee , Pranab Mukherjee, Aashi, Modi
× RELATED அருள்தந்தை டேவிட் மைக்கேலின் குருத்துவ வெள்ளி விழா 16-ம் தேதி நடக்கிறது