×

மராத்தியில் பதவி பிரமாணம்: சிவசேனா எம்பி.க்கள் முடிவு

தானே: சிவசேனாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள், மராத்தி மொழியில் 17வது மக்களவையில் சத்தியப்பிரமாணத்தை ஏற்றுக் கொள்ள உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 48 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் உத்தவ் தாக்கரே  தலைமையிலான சிவசேனா 18  இடங்களை கைப்பற்றியது. சிவசேனா - பாஜ கூட்டணி 41 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இது குறித்து இக்கட்சி எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே நேற்று அளித்த பேட்டியில், ‘‘17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் அடுத்த மாதம் 6ம் தேதி தொடங்கி, 15ம் தேதி வரை நடக்கிறது. இதில், எந்த மொழியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சுதந்திரம் மக்களவை உறுப்பினர்களுக்கு உள்ளது. மராத்தி மொழி  மற்றும் எங்களின் நிலம் பற்றி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மேலும்,  மராத்தியை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் சிவசேனா உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, மராத்தியில்  எங்கள் எம்.பி.க்கள் அனைவரும் பதவிபிரமாணம் எடுத்துக்கொள்வர்,’’என்றார். இம்மாநிலத்தில் வரும் அக்டோபரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

Tags : MPs ,Shiv Sena ,Marathis , Marathi, promotion, Shiv Sena MP,
× RELATED நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை