×

மேற்குவங்கத்தில் 2 திரிணாமுல் எம்எல்ஏக்கள்,ஒரு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. பாஜகவில் இணைந்தனர்

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 2 பேர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளனர். எம்.எல்.ஏ சுப்புரங்கசு ராய் தலைமையில் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 2 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் சேர்ந்துள்ளனர். திரிணாமுல்  எம்.எல்.ஏக்கள் 2 பேரும் டெல்லி சென்று பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியில் இணைந்துள்ளனர். அதேபோல் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ஒருவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார். பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய வர்ஜியா முன்னிலையில் தேவேந்திரநாத் ராய் அக்கட்சியில்இணைந்துள்ளார்.

Tags : West Bengal ,TMC MLAs ,BJP ,Marxist Communist MLA , West Bengal, 2 Trinamool MLA, a Marxist Communist MLA, BJP, joined
× RELATED பாஜதான் ஊழல் கட்சி: பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி