பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் கால்நடை டாக்டர் மீது மத அவமதிப்பு செய்வதாக புகார்

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள புலாடியான் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இந்து மதத்தை சேர்ந்தவர். இவர் கால்நடை டாக்டராக இருக்கிறார். இவர் மத அவமதிப்பு செய்வதாக புகார் செய்யப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த தலைமை மதகுரு மவுலவி இசாக் நோக்ரி கொடுத்த புகாரின் பேரில் டாக்டர் ரமேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே டாக்டர் ரமேஷ்குமாருக்கு எதிராக புலாடியான் நகரில் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் இந்துக்களின் கடைகளை தீ வைத்து எரித்தனர். டயர்களும் கொளுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து டாக்டர் ரமேஷ்குமார் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டார்.

Related Stories: