அமெரிக்காவிடம் இருந்து F35 ரகத்தின் 105 போர் விமானங்களை வாங்க ஜப்பான் முடிவு

அமெரிக்கா: அமெரிக்காவிடம் இருந்து F35 ரகத்தின் 105 போர் விமானங்களை வாங்க ஜப்பான் முடிவு செய்துள்ளது. அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய டிரம்ப், தங்களிடம் இருந்து F35 ரகத்தின் 105 போர் விமானங்களை ஜப்பான் வாங்க உள்ளதாக தெரிவித்தார்.

இவற்றை வாங்கும் பட்சத்தில், F-35 ரக போர் விமானங்களை அதிக எண்ணிக்கையில் வைத்திருக்கும் அமெரிக்க நட்பு நாடாக ஜப்பான் இருக்கும் என்றும் டிரம்ப் கூறினார். 105 F35 போர் விமானம் ஒன்றின் விலை 63 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

× RELATED அமெரிக்காவின் வர்த்தகப்போர் குறித்து...