காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகக் கூடாது: ரஜினிகாந்த் கருத்து

சென்னை: காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகக் கூடாது என்று ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தார். ஜனநாயகத்தில் ஆளுங்கட்சி போலவே எதிர்க்கட்சியும் முக்கியமானது என குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சியை வழிநடத்துவது என்பது மிகவும் கடினமான செயல் என்று நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். பழம்பெரும் கட்சியான காங்கிரசில் மூத்த தலைவர்கள் பலர் உள்ளனர் என்றும் மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு ஒத்துழைப்பு தரவில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, மக்களவை தேர்தலில் கணிசமான வாக்கு பெற்ற ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். கட்சி தொடங்கிய 14 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலில்  ம.நீ.ம. சுமார் 4 சதவீத வாக்கு என்பது கணிசமானது தான் என ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.Tags : Rahul Gandhi ,president ,Congress , Chennai, Congress leader, Rahul Gandhi, should not step down, Rajinikanth
× RELATED ஜே.என்.யு. பல்கலை கழகத்தில்...