×

குடலில் மறைத்து கடத்தி வந்த கொகைன் பாக்கெட்கள் பிரிந்து ஜப்பானிய பயணி நடுவானில் பலி

ஜப்பன்: குடலில் மறைத்து கடத்தி வந்த கொகைன் பாக்கெட்கள் பிரிந்து ஜப்பானிய பயணி நடுவானில் பலியானார். கொலம்பியா தலைநகர் போகோடாவில் இருந்து டோக்கியோ சென்ற ஏரோமெக்சிகோ விமானத்தில் பயணத்த ஜப்பானை சேர்ந்த 42 வயது பயணிக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டதால், மெக்சிகோ நகரத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு அந்த நபருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட போது, அவர் விமானத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும் அந்த நபரின் குடலில், 2.5 சென்டிமீட்டர் நீளம் கொண்ட 246 கொகைன் பாக்கெட்கள் இருந்ததும், அந்த பாக்கெட்களில் சில பிரிந்து, அந்த நபரின் ரத்தத்தில் அதிகப்படியான போதைப்பொருள் கலந்ததால் அவர் உயிரிழந்ததும் பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : passenger ,Japanese , Japanese,passenger,kills,cocaine pockets hiding,gut
× RELATED 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு...