×

தாராசுரம் மார்க்கெட்டில் பல மாதங்களாக மின்விளக்குகள் எரியவில்லை: வியாபாரிகள் அவதி

கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்திலுள்ள நேரு அண்ணா மொத்தம் மற்றும் சில்லரை காய்கறி வணிக வளாகத்தில் பல மாதங்களாக லைட்டுக்கள் பழுதால் இருளில்மூழ்கி கிடப்பதால் வியாபாரிகள், மொத்த விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். கும்பகோணம் அடுத்த தாராசுரம் மார்க்கெட்டில் 100க்கும் மேற்பட்ட மொத்த வியாபார கடைகளும், 1000 க்கும் மேற்பட்டசில்லரை காய்கறி கடைகளும் உள்ளன. மார்கெட்டிற்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும், தமிழகம் முழுவதிலிருந்தும் பல்வேறு காய்கறிகள் லாரி மூலம் வருகின்றது. இதன் மூலம் தினந்தோறும் 1000 டன் காய்கறிகளும் சுமார் ரூ. 2 கோடிக்கு விற்பனை நடைபெறும். மேலும் விஷேச நாட்களில் விற்பனை அதிகரிக்கும். தாராசுரம் காய்கறி மார்க்கெட் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய காய்கறி மார்க்கெட் என்ற சிறப்பு உண்டு. இத்தகையை பெருமை பெற்ற தாராசுரம் மார்க்கெட்டில் 100க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் உள்ளன. இவற்றில் 25 மின் விளக்குகள் கூட எரிவதில்லை. இதே போல் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் மற்றும் கும்பகோணம் நகராட்சி காய்கறி வணிக வளாகம் என்ற பெயர் பலகையில் உள்ள டிஜிட்டல் லைட்டுகள் எரியாமல் உள்ளது.

இந்த மார்க்கெட்டில் தினந்தோறும் மாலை 9 மணியளவில் காய்கறிகள் வியாபாரம் தொடங்கி அதிகாலை 5 மணியோடு மொத்த வியாபாரம் முடிந்தவுடன், அதன் பிறகு சில்லறை வியாபாரம் நடைபெறும். மின் விளக்குகள் பல மாதங்களாக எரியாததால், வியாபாரிகள் தினந்தோறும் அச்சத்துடன் விற்பனை செய்து வருகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம், தாராசுரம் மார்க்கெட்டில் எரியாமல் உள்ள லைட்டுக்களையும், தமிழின் பெருமை குறிக்கும் டிஜிட்டல் லைட்டுக்களையும் சீர் செய்ய வேண்டும் என காய்கறி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து காய்கறி மொத்த வியாபாரி ரமேஷ் கூறுகையில், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த கோசி. மணி, கும்பகோணத்தை பிரமாண்டமான வகையில் மாற்ற வேண்டும் என்று தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதியிலுள்ள மக்கள் காய்கறிகள் வாங்க சிரமப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் தாராசுரத்தில் காய்கறி மார்ர்க்கெட் கொண்டு வந்தார். இரவு நேரத்தில் தான் வியாபாரம் நடைபெறும் என்பதால், நூற்றுக்கும் மேற்பட்ட மின் விளக்குகளும் பொருத்தப்பட்டது. இதேபோல் பெயர்பலகையில் டிஜிட்டல் விளக்குகள் அமைக்கப்பட்டது.

அதன் பின்னர் ஆட்சி மாற்றம் வந்த பிறகு, உள்ளாட்சி அமைப்புகள் காய்கறி மார்கெட்டை முழுவதுமாக அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. கும்பகோணம் நகராட்சி நிர்வாகத்தின் கீழுள்ள காய்கறி மார்கெட்டில் பல கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்து வரும் நிலையில், நகராட்சிக்கு தேவையான கட்டணத்தை செலுத்தி வருகின்றோம். ஆனால் போதுமான மின்விளக்குகள் எரியாமல் பழுதாகி பல மாதங்கள் ஆன நிலையில் நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை வியாபாரிகள் புகார் அளித்தும், கண்டுகொள்வதில்லை. மேலும் பல கோடி ரூபாயிக்கு இரவு நேரத்தில் விற்பனை நடைபெறுவதால், மின் விளக்குகள் எரியாததால் திருட்டு சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது. எனவே , கும்பகோணம் நகராட்சி நிர்வாகம் கார்கறி மார்க்கெட்டில் உடனடியாக எரியாமல் உள்ள மின் விளக்குகளையும், டிஜிட்டல் போர்டு லைட்டுக்களையும் உடனடியாக சீரமைத்து எரிய வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags : merchants ,Darasuram , Kumbakonam, electrodes, merchants, suffering
× RELATED மதுரையில் வணிகர்கள் சங்கங்களின்...