×

காட்சி பொருளான குடிநீர் தொட்டி... சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

உடன்குடி: உடன்குடி அருகே வேப்பங்காட்டில் காட்சி பொருளான குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். உடன்குடி யூனியனுக்குட்பட்ட வேப்பங்காடு ஆரோக்கியபுரம் துவக்கப்பள்ளி அருகே சின்டெக்ஸ் சிறுமின்விசை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. குடிநீர் தொட்டி மூலம் அந்த பகுதி மக்கள் பயன் பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடிநீர் தொட்டி பழுதடைந்தது. இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் குடிநீர் தொட்டிக்கான மின்இணைப்பு பராமரிப்பின்றி உயிர்ப்பலி வாங்கும் நிலையில் உள்ளது. தற்போது கோடை வெயிலால் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Water, tank, Udangudi
× RELATED உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா...