×

செங்கம் பகுதியில் குழந்தை தொழிலாளர்கள், பள்ளி செல்லா குழந்தைகள் அதிகரிப்பு

செங்கம்: செங்கம் தாலுகாவில் உள்ள கிராமங்களில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. மாவட்டம் முழுவதும் பள்ளி வயது குழந்தைகள் கணக்கெடுக்கும் பணிநடைபெற்று வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வலியூறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும் என தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் திட்டம் முழுமை பெறவில்லை. செங்கம் பகுதியல் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் அதிகரித்து உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதற்கு துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் வெறும் கண்துடைப்புக்கு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். இங்கு அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டம் காற்றில் பறக்கும் அவலத்தில் உள்ளது.எனவே, தாலுகா முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள் குறித்து முறையாக ஆய்வு செய்து அந்த குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,school children ,Vimanam ,children , children, school
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...