×

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி முதல் சுற்றில் ரபெல் நடால், ஜோகோவிச் வெற்றி

பாரிஸ்: கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 2-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் 11 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் ஜெர்மனியின் தகுதி சுற்று வீரர் யான்னிக் ஹன்ப்மனை எதிர்கொண்டார்.

இதில் 6-2, 6-1, 6-3 என்ற நேர்செட்டில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் போலந்து வீரர் ஹூபெர்ட் ஹூர்காச்சை எதிர்கொண்டார். இதில், 6-4, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் ஹூர்காச்சை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.


Tags : tournaments ,Grand Slam ,French Open ,Rafael Nadal ,Jogovich , One,Grand Slam tournaments, French Open tennis, Rafael Nadal, Jogovich
× RELATED துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் ஆஸி. ஓபன் சாம்பியன் சபலென்கா அதிர்ச்சி தோல்வி