×

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு... வாகன ஓட்டிகள் கலக்கம்

சென்னை:  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த நிலையில், மக்களவை தேர்தல் முடிந்த பிறகு, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.59 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.50 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.74.59 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.70.50 காசுகளாகவும் உள்ளது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Tags : Petrol, diesel, rise, motorists, shock
× RELATED போலியான அறிவிப்புகளை மாணவர்கள் நம்ப வேண்டாம்: யுஜிசி எச்சரிக்கை