தொடர் குற்றச் செயல்: 7 பேருக்கு குண்டாஸ்

சென்னை: சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், கொலை, ஆள் கடத்தல் உட்பட 64 வழக்கில் தொடர்புடைய புளியந்தோப்பு நரசிம்மன் நகர் 2வது தெருவை சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் (எ) ஆற்காடு சுரேஷ் (42), கொலை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்த எர்ணாவூர் பாரதியார் நகர் 2வது ெதருவை சேர்ந்த வீரராகவன் (25), ரிச்சர்டு அபிஷேக் ராஜ் (23), வீடு புகுந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த கொருக்குபேட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்த அப்பு (எ) அப்புன்ராஜ் (27), செங்குன்றம் பாலவாயல் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த நாகராஜ் (25), கஞ்சா மற்றும் அடிதடி வழக்கில் தொடர்புடைய புளியந்தோப்பு சிவராஜபுரம் 1வது தெருவை சேர்ந்த மணிமாறன் (24), அடிதடி வழக்கில் தொடர்புடைய ராயப்ேபட்டை  சர்புதீன் கார்டன் பகுதியை ேசர்ந்த ஷேக் (எ) அப்துல் காதர் (27) ஆகிய 7 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது ெசய்தனர்.

Related Stories:

>