×

திருத்தணியில் வெயிலின் உக்கிர தாண்டவம் மலைப்பாறை வெடித்து சிதறியது: மக்கள் அதிர்ச்சி

சென்னை: கடந்த ஆண்டு பருவ மழை பொய்ந்துபோனதால் கடும் வறட்சி நிலவுகிறது. தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் மரங்கள் கருகி, இலைகள் உதிர்ந்து எலும்பு கூடுகளாக காட்சி அளிக்கின்றன. செடிகள் அனைத்தும் காய்ந்து கருவாடாக போனது. கால்நடைகள் தண்ணீர் இல்லாததால், அடிமாட்டு விலைக்கு விற்கப்படுகிறது. இந்த நிலையில், திருத்தணி பகுதியில் நாளுக்கு நாள் வெயில் உக்கரம் அதிகரிக்க அனல் காற்று விசியது.இதனால், பொதுமக்கள் வெளியில் தலை காட்டவே அஞ்சி வீடுகளில் முடங்கினர். இந்த வெயில் காரணமாக திருத்தணி நகரத்திலும், சுற்று வட்டார கிராமங்களிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால், பல பகுதிகளில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அக்னி முடியும் நிலையில், தமிழகத்திலேயே அதிகபட்ச வெயில் திருத்தணி காய்ந்து வருவகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் திருத்தணி மலை அடிவாரத்தில் வன துர்க்கை அம்மன் கோயில் உள்ளது. அந்த கோயிலின் பின்புறத்தில் உள்ள மலைப்பாறைகளில் திடீரென வெடிப்புகள் ஏற்பட்டு, இரண்டாக பிளந்து காணப்படுகிறது. இதை கண்ட பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



Tags : Vaiyalai ,hill , Wiley's, Edamani, mountain, burst
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்..!!