×

வியாசர்பாடியில் 100 மாணவர்களுக்கு கல்வி உபகரணம்: துணை கமிஷனர் வழங்கினார்

பெரம்பூர்: வியாசர்பாடி போலீஸ் பாய்ஸ் கிளப் சார்பில், மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று வியாசர்பாடியில் நடந்தது. போலீஸ் பாய்ஸ் கிளப் தலைவர் அமாவாசை  தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி, எம்கேபி நகர் உதவி கமிஷனர் அழகேசன் மற்றும் ேபாலீசார் கலந்து கொண்டனர். இதில், துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி பேசியதாவது: வியாசர்பாடி என்றாலே ஒரு காலத்தில் ரவுடிகள் நிறைந்த பகுதியாக கருதப்பட்டது. இந்த நிலை தற்போது படிப்படியாக குறைந்துள்ளது.

இங்குள்ள வாலிபர்கள் கால்பந்தாட்டத்தில் சிறந்து விளங்குபவர்களாக உள்ளனர். இவர்களுக்கு முறையான  பயிற்சி அளித்தால், மாநில அளவில் சிறந்த கால்பந்தாட்ட வீரர்களாக வலம் வருவர். இங்கு ஒரு கால்பந்தாட்ட விளையாட்டு திடல் உள்ளது. அதை பராமரிக்கவும், மாணவர்களை ஊக்கப்படுத்தவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வர  வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.



Tags : Vyasarpadi ,Assistant Commissioner , 100 students,Vyasarpadi, Educational, Equipment,Assistant Commissioner
× RELATED வியாசர்பாடி சர்மா நகரில் டாஸ்மாக் கடையில் DVR கருவி திருட்டு..!!