×

வடகொரியா ஏவுகணை சோதனை கவலையில்லை: ஜப்பானில் மனம் திறந்தார் அதிபர் டிரம்ப்

டோக்கியோ: அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வட கொரியா ஏவுகணை சோதனை பற்றி தனக்கு கவலையில்லை என்று கூறியுள்ளார். அமெரிக்கா-ஜப்பான் தலைவர்களுக்கு இடையிலான நட்புறவை வெளிப்படுத்தும் விதமாக ஜப்பான் வரும்படி அதிபர் டிரம்புக்கு அந்நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபே அழைப்பு விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட டிரம்ப், 4 நாட்கள் அரசுமுறை  பயணமாக ஜப்பான் வந்துள்ளார். அங்கு டோக்கியோவில் உள்ள அகாசேக் அரண்மனையில் நடந்த மாநாட்டில், இருநாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து ஷின்ஜோ அபேயுடன், டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாடுகளின்  பொருளாதாரம், வர்த்தகம், ஈரான் விவகாரம் உள்ளிட்டவை குறித்தும்  பேச்சுவார்த்தை நடத்தியதாக டிரம்ப் தெரிவித்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிரம்பிடம் வட கொரியா ஏவுகணை சோதனை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த டிரம்ப், `அதனால் தனக்கு கவலையில்லை’ என்று தெரிவித்தார். மேலும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மிகவும் சாதுர்யமான தலைவர் என்றும் இரண்டுமுறை சந்திப்பின் போதும் தனக்கு கொடுத்த அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கை குறித்த வாக்குறுதியை நிச்சயமாக காப்பாற்றுவார் என நம்புவதாகவும்  பதிலளித்தார். உலகின் கவனத்தை ஈர்க்கவே அவர் இம்மாத தொடக்கத்தில் இரண்டு குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை நடத்தியதாக குறிப்பிட்ட டிரம்ப், என்றாவது ஒருநாள் ஒப்பந்தம் ஏற்படும்; அதற்கு தற்போது அவசரமில்லை என்று கூறினார்.ஆனால் இதற்கு பதிலளித்த ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ, வடகொரியாவின் குறுகிய தொலைவு ஏவுகணைகள் தொலைவில் உள்ள அமெரிக்காவை சென்று தாக்காது என்பதால் அவர் கவலையில்லை என கூறுகிறார். ஆனால் வடகொரியாவின்  அருகில் உள்ள அமெரிக்க நட்பு  நாடுகளான ஜப்பான் போன்ற நாடுகள் இதுகுறித்து மிகுந்த அச்சமும் கவலையும் அடைந்துள்ளோம் என தெரிவித்தார்.

Tags : North Korea ,Japan , North Korea, launchers, President ,Trump o, Japan
× RELATED வடகொரியா போருக்கு தயாராகி வருகிறது:...