×

சிக்கிம் முதல்வராக பி.எஸ்.கோலே பதவியேற்பு

கங்காடாக்: பி.எஸ்.கோலே என்று அழைக்கப்படும், சிக்கிம் கிராந்திகரி மோர்சா கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங் நேற்று சிக்கிம் மாநிலத்தின் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். சிக்கிமில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. சிக்கிமில் மொத்தம் 32 இடங்களில் தேர்தல் நடந்தது. தனி பெரும்பான்மை பெற 17 இடங்களில் வெல்ல வேண்டும். ஆளும் கட்சியான சிக்கிம்  ஜனநாயக முன்னணி 15 இடங்களில் வெற்றி பெற்றது. சிக்கிம் கிராந்திகரி மோர்சா கட்சி   17 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் தலைவர் பிரேம் சிங்  தமாங் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

இதையெடுத்து கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.இந்நிலையில் கேங்வாட் நகரில் உள்ள பல்ஜோர் அரங்கத்தில் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் அம்மாநில ஆளுநர் கங்கா பிரசாத், பிரேம் சிங் தமாங்கிற்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்புறுதி பிரமாணம் செய்து  வைத்தார். இந்த விழாவில் ஏராளமான தொண்டர்கள் கலந்துக்கொண்டனர். முதல்வராக பதவியேற்றுள்ள பி.எஸ்.கோலே பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ஏதாவது ஒரு தொகுதியில் எம்எல்ஏ.வை  ராஜினாமா ெசய்யவைத்து அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : BK Kohli ,Chief Minister ,Sikkim , Sikkim , Chief Minister, PS Gokhale ,sworn
× RELATED முதல்வர், துணை முதல்வர் ஜனாதிபதியை வரவேற்றனர்