×

பிரெஞ்ச் ஓபன் 2வது சுற்றில் நடால்: விலகினார் குவித்தோவா

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் தகுதி பெற்றார்.முதல் சுற்றில் ஜெர்மனியின் யானிக் ஹான்ப்மேனுடன் நேற்று மோதிய நடால் 6-2, 6-1, 6-3 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 57 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. முன்னணி வீரர் டானில் மெட்வதேவ் (ரஷ்யா, 14வது ரேங்க்) தனது முதல் சுற்றில் 6-4, 6-4, 3-6, 2-6, 5-7 என்ற செட் கணக்கில் பிரான்சின் பியர்ரி ஹெர்பர்ட்டிடம் போராடி தோற்றார். விறுவிறுப்பான இப்போட்டி 3 மணி, 54 நிமிடத்துக்கு நீடித்தது.

வோஸ்னியாக்கி அதிர்ச்சி: மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (13வது ரேங்க்) 6-0, 3-6, 3-6 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் வெரோனிகா குதெர்மதோவாவிடம் (68வது ரேங்க்) அதிர்ச்சி  தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.முன்னணி வீராங்கனைகள் கிகி பெர்டன்ஸ் (நெதர்லாந்து), சொரானா சிர்ஸ்டீ (ரோமானியா), ஆஷ்லி பார்தி (ஆஸி.), ஜோகன்னா கோன்ட்டா (இங்கிலாந்து) ஆகியோர் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.செக் குடியரசு வீராங்கனை பெத்ரா குவித்தோவா, இடது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரெஞ்ச் ஓபனில் இருது விலகுவதாக நேற்று அறிவித்தார். இவர் 2012ல் அரை இறுதி வரை முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.Tags : Nadal ,round ,French Open , French Open, Nadal, Quitovoa, quit
× RELATED அப்பாடா... அரையிறுதியில் நடால்