அதிமுகவினர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்: ஓபிஎஸ், இபிஎஸ் கோரிக்கை

சென்னை: அதிமுக அரசை கட்டி காத்த வாக்காளர்களுக்கு அதிமுகவினர் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கேட்டுக் கொண்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வாக்காளர்கள் மக்களாட்சியின் இதயம் போன்றவர்கள். ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்று எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பலமுறை நமக்கு நினைவுபடுத்தி இருக்கிறார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்ற மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும், அதிமுக வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் பல கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை வழங்கியிருக்கிறார்கள்.

தமிழக அரசையும், அதிமுகவையும் தங்கள் வாக்குகளால் கட்டிக் காத்திருக்கும் வாக்காளர்களை நேரடியாக சந்தித்து நன்றி கூற வேண்டியது, அதிமுகவினரின் இன்றியமையாத கடமை. எனவே, தமிழகம் முழுவதும் ஜூன் மாதம் முதல் வாரம் தொடங்கி அதிமுக நிர்வாகிகளும், வேட்பாளர்களும், நேரடி சந்திப்புகள் வழியாகவும், பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் நன்றி தெரிவித்திட கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Tags : Vice President ,voters ,OBS , Opposition, voters, thanks to OBS, EPS, request
× RELATED வாக்காளர்களுக்கு கொடுக்க ஆளும்கட்சியினர் பணம் பதுக்கல்