×

மாந்திரீகம் செய்வதாக கூறி 50 பெண்களை சீரழித்த போலி சாமியார் கைது

திண்டிவனம்: திண்டிவனம் அருகே மாந்திரீகம் செய்வதாக கூறி 50 பெண்களை சீரழித்த போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.  விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஓங்கூரில் வசித்து வருபவர் பெருமாள்மணி என்கின்ற செல்வமணி(35). இவரது சொந்த ஊர், காஞ்சிபுரம் மாவட்டம் சூணாம்பேடு. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. செல்வமணி போலியாக மாந்திரீகம், பில்லிசூனியம் வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இது பிடிக்காததால், அவரது மனைவி, குழந்தைகளுடன் பிரிந்து சென்றார். மாந்திரீகம் செய்யும் இடங்களில் இளம்பெண்களை அடைய வேண்டும் என்ற ஆசை செல்வமணிக்கு ஏற்பட்டுள்ளது.  இதற்காக, ஆசைவார்த்தை கூறி சில பெண்களை ஏமாற்றி தன்னுடன் கொஞ்ச காலம் வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.  இதேபோன்று 50 பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். இவர்களில் ஒருவரான ஹேமா என்பவரை தனக்கு உதவியாளராக பயன்படுத்தி உள்ளார். இதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் வடமலைப்பாக்கம் என்ற ஊரில் உள்ள ஒருவரது வீட்டுக்கு மாந்திரீகம் செய்ய செல்வமணியும் ஹேமாவும் சென்றுள்ளனர். அப்ேபாது, அந்த வீட்டின் உரிமையாளரின் 19 வயதுடைய மகளை பார்த்ததும் அடைய துணிந்துள்ளார். இதையடுத்து, உரிமையாளரிடம் உனது வீட்டில் சில பரிகார பூஜைகள் செய்ய வேண்டும். அதனால் கன்னிப்பெண்கள் யாரும் இருக்கக்கூடாது என கூறியுள்ளார். இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்ற உரிமையாளரிடம் ஹேமா, என்னுடன் உங்களது மகளை தங்க வைத்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதற்கு, தந்தையும் ஒப்புக்கொண்டுள்ளார். இதன்பின், இளம்பெண்ணை 2 பேரும் திண்டிவனம் அருகே ஓங்கூருக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு இளம்பெண்ணிடம், `உங்கள் வீட்டில் உள்ள பிரச்னைகள் சரியாக வேண்டுமென்றால் நீ என்னுடன் உடலுறவு கொள்ள வேண்டும்’ என செல்வமணி கட்டாயப்படுத்தி உள்ளார். இதைகேட்டு பயந்துபோன இளம்பெண்ணும் சம்மதித்துள்ளார். அதன்பின், பலமுறை அவரை சீரழித்துள்ளார். அவரது தந்தை கேட்கும்போதெல்லாம் உன் வீட்டின் பிரச்னைகள் இன்னும் தீரவில்லை. ஆதலால் உனது மகள் என் வீட்டில்தான் இருக்கவேண்டும் என கூறியுள்ளார். இதற்கு தந்தையும் சம்மதித்தார். சுமார் ஒரு வருடத்துக்குபின் செல்வமணியின் விவகாரம் இளம்பெண்ணின் தந்தைக்கு தெரியவந்தது. உடனே, செல்வமணி வீட்டுக்கு சென்று மகளை மீட்டு வந்துள்ளார். அப்போது, தனக்கு நேர்ந்த கொடுமையை இளம்பெண் கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து தந்தை புகாரின்படி  திண்டிவனம் அனைத்து மகளிர் காவல்நிலைய  போலீசார் வழக்குப்பதிந்து செல்வமணி, அவருக்கு உடந்தையாக இருந்த ஹேமா ஆகியோரை கைது செய்தனர்.

Tags : arrest ,women ,thieves , Thackeray, fake sage, arrested
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...