×

என்இசிசி மீது உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு நாமக்கல்லில் 15 கோடி முட்டை தேக்கம்

நாமக்கல்: நாமக்கல்லில், நேற்று நாமக்கல் மண்டல முட்டை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் தலைவர் மோகன் நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மண்டலத்தில் தினமும் 4.50 கோடி முட்டை உற்பத்தியாகிறது. முட்டைக்கு விலை நிர்ணயம் செய்யும் என்இசிசி பண்ணையாளர்களின் கருத்தை கேட்காமல் தங்கள் இஷ்டத்துக்கு விலை நிர்ணயம் செய்து வருகிறது.

ஐதராபாத், பெங்களூருவில் ஒரு முட்டை ரூ.2.90 முதல் ரூ.3.10க்கு கிடைக்கிறது. ஆனால் நாமக்கல்லில் என்இசிசி முட்டை விலையை அதிகமாக நிர்ணயம் செய்கிறது. தற்போது ஒரு முட்டையின் பண்ணை பரிந்துரை விலை 390 காசு என என்இசிசி அறிவித்துள்ளது. ஆனால் பண்ணைகளில் 340 காசுக்குத்தான் நாங்கள் விற்கிறோம். இந்த விலைக்கு கூட தற்போது வியாபாரிகள் முட்டையை வாங்க வருவதில்லை.

சென்னையை வியாபாரிகள் பெங்களூருவில் ஒரு முட்டை 290 காசுக்கு கிடைப்பதால் அங்கு வாங்குகிறார்கள். நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கு அதிகம் விலை வைத்ததால் பண்ணைகளில் முட்டைகள் தேக்கமடையத் தொடங்கிவிட்டன. விற்க முடியாததால் நாமக்கல் பகுதியில் உள்ள அனைத்து பண்ணைகளிலும் 5 நாள் முட்டை தேங்கி கிடக்கிறது. சுமார் 15 கோடி முட்டைகளை இருப்பு வைத்துள்ளோம். வெயில் அதிகமாக இருப்பதால், 15 நாட்களுக்கு மேல் முட்டைகளை பண்ணைகளில் இருப்பு வைக்க முடியாது என்றார்.

Tags : Producers ,NICC , NICC, Manufacturers, Accusations, Namakkal, 15 Crore, Egg Stagnation
× RELATED திருச்சிற்றம்பலம் உழவர்...