×
Saravana Stores

தரையிலிருந்து வான் பகுதியிலுள்ள இலக்கை அழிக்கும் ஆகாஷ் 1 எஸ் ஏவுகணை சோதனை வெற்றி: டிஆர்டிஓ தகவல்

புதுடெல்லி: தரையிலிருந்து வான் பகுதியிலுள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஆகாஷ் 1 எஸ் ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும்  மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) மீணடும் வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. தரையில் இருந்து விண்ணில் சென்று இலக்குகளை துல்லியமாக  தாக்கி அழிக்கும் ஆகாஷ் ரக ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) தயாரித்துள்ளது. குறுகிய  தொலைவு பாயும் இந்த ஏவுகணையானது ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இந்த ஏவுகணை மேம்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து சூழ்நிலையிலும் இந்த ஏவுகணைகளை செயல்படுத்த முடியும். அவ்வகையில்  உள்நாட்டு சீக்கர் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் 1எஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இந்த  பரிசோதனையின்போது, ஏவுகணை தனது இலக்கை துல்லியமாக தாக்கியது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பும் இதேபோன்று சோதனை  செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த, ஆகாஷ் 1 எஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து  வருகின்றனர்.


Tags : Air Area, Akash 1S Missile Test, Win, DRTO
× RELATED நவம்பர் முதல் வார இறுதியில்...