×

விருதுநகர் சாலைகளில் பட்டுப்போன மரங்களால் பதறும் வாகன ஓட்டிகள்

விருதுநகர்: விருதுநகரில் உள்ள சாலைகளில் பல இடங்களில் நிற்கும் பட்டுப்போன மரங்களால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. விருதுநகர் நகரப்பகுதியை சுற்றியுள்ள சாலைகளில் பட்டு போன மரங்களை நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினர் அகற்றாமல் இருப்பதால், பல நேரங்களில் மரங்கள் முறிந்து கீழே விழுந்துள்ளது. தற்போது விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலை அல்லம்பட்டி முக்கு பகுதியில் 80 ஆண்டுக்கும் மேலான 3 புளிய மரங்கள் பட்டுப்போய், காய்ந்து, மரக்கிளைகள் அனைத்து உளுத்து போய் கீழே விழும் அபாய கட்டத்தில் உள்ளது. இந்த மரத்தை அகற்ற நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், இதுவரை அகற்றவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் மரத்தின் பெரிய கிளை ஒன்று முறிந்து அப்பகுதியில் இருந்த மின் கம்பியில் விழுந்து சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பல மணி நேரம் கழித்து வினியோகம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பின் பட்டுப்போன மரத்தை அகற்றிவிடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பட்டு போய், வழுவிழந்து, அடிக்கடி கிளைகள் முறிந்து விழும் இந்த மரத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித பதற்றத்துடன் ெசல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக பட்டுப்போன மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags : Vehicle drivers ,Virudhunagar , Virudhunagar, motorists
× RELATED சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததே...