×

ஜேடிஎஸ்-பாஜக கூட்டணி?....... 2007-ல் செய்த தவறை மீண்டும் செய்யப் போவதில்லை: எடியூரப்பா சூசகம்

பெங்களூரு: கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்று அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடகாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 28 மக்களவைத் தொகுதிகளில் 26ஐ பாஜக கைப்பற்றியது. அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா கூறியதாவது: காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டதால், அவர்கள் தொடர்ந்து ஆட்சி செய்வது மக்களின் தீர்ப்புக்கு எதிரானது எனக் கூறியுள்ளார். காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி உடையும் பட்சத்தில், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி உடன் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சி செய்யுமா எனக் கேட்டதற்கு, 2007-ல் செய்த தவறை மீண்டும் செய்யப் போவதில்லை என்றும், புதிதாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags : JDS ,alliance ,BJP , Karnataka, Secular Nation, Yeddyurappa, BJP, Congress,
× RELATED ரொம்ப திட்டுறாங்க ஆபீசர்….தேர்தல் ஆணையத்தில் பா.ஜ பரபரப்பு புகார்