×

சிக்கிம் மாநில முதல்வராக பதவியேற்றார் கிரந்தகாரி மோர்ச்சா கட்சித் தலைவர் பி.எஸ்.கோலோ

சிக்கிம்: சிக்கிம் மாநில முதல்வராக சிக்கிம் கிரந்தகாரி மோர்ச்சா கட்சித் தலைவர் பி.எஸ்.கோலோ பதவியேற்றார். சிக்கிம் கிராந்திகாரி கட்சி கடந்த 2013-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 32 இடங்களில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 17 தொகுதிகளில் வெற்றிபெற்று பெரும்பான்மை பெற்றது. இந்நிலையில் கட்சி தொடங்கிய 6 ஆண்டுகளில் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எஃப்.) 15 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து, ஆளுநர் கங்காபிரசாதை சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சித் தலைவர் பிரேம் சிங் தமாங், 17 எம்எல்ஏக்களுடன் சென்று சந்தித்து ஆட்சியமைக்க சனிக்கிழமை உரிமை கோரினார்.

இந்நிலையில் சட்ட ஆலோசனை கேட்ட பிறகு மாநிலத்தில் ஆட்சியமைக்கும்படி பிரேம் சிங் தமாங்குக்கு ஆளுநர் கங்கா பிரசாத் அழைப்பு விடுத்தார். கேங்டாக்கில் உள்ள பல்ஜோர் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பிரேம் சிங் தமாங் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றது. விழாவில் பிரேம் சிங் தமாங்குக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் ஆளுநர் கங்காபிரசாத் செய்து வைக்கவுள்ளார். பிரேம்சிங்குடன் அவரது அமைச்சரவையும் பதவியேற்றது. முன்னதாக, ஊழல் வழக்கில் பிரேம் சிங் தமாங், ஓராண்டு சிறை தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Tags : Sikkim ,Chief Minister ,state ,party leader ,Krantakari Morcha ,PS Kola , Sikkim, Chief Minister, Kranthagari Morcha Party, PS Kollo
× RELATED நம்புங்கள்… நான் முதல்வராவேன்; கர்நாடக துணை முதல்வர் திடீர் பேச்சு