×

நேபால் தலைநகரான காத்மண்டுவில் நேற்று மூன்று வெவ்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு: 4 பேர் உயிரிழப்பு, 7 பேர் படுகாயம்

நேபாளம்: நேபாள தலைநகரான காத்மண்டுவில் நேற்று மூன்று வெவ்வேறு இடங்களில் குண்டுவெடித்துள்ளது. சுகேதரா கட்டிகுலோ மற்றும் நாக்துங்கா உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் காத்மண்டுவின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டதாக 9 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க நேபாள இராணுவம் மற்றும் ஆயுதமேந்திய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த குண்டுவெடிப்புக்கான விவரங்கள் குறித்து நேபாள இராணுவம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Kathmandu ,locations ,Nepal , Blast,three different locations,Nepal's capital,Kathmandu, 4 dead and seven injured
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு