பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதலாவது சுற்றில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர், கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் ஆகியோர் வெற்றி

பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதலாவது சுற்றில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர், கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர். முதல் சுற்றில் இத்தாலியின் லாரென்சோ சோனேகோ வை எதிர்கொண்ட பெடரர் 6-2 6-4 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் முன்னணி வீராங்கனைகளான வீனஸ் வில்லியம்ஸ், ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் தோல்வியைத் தழுவினர். நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் கெர்பரை ரஷ்யாவின் இளம் வீராங்கனை அனஸ்தாசியா பொடபோவா 6-4 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தினார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் 9ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் போட்டியில் உலகின் முன்னணி வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

குறிப்பாக, மூன்று பிரெஞ்ச் ஓபன் உள்ளிட்ட 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரினா வில்லியம்ஸ் இம்முறையும் கோப்பையை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா, ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், ஸ்பெயின் நாட்டின் முகுருசா, செரினாவின் சகோதரி வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் களம் காண்கின்றனர். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதலாவது சுற்றில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர், கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.  மேலும் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர், முதல் நிலை வீரரான ஜோகோவிச், ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் ஆகியோர் தங்கள் முழுத் திறமையை வெளிப்படுத்தி விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Roger Federer ,Swiss ,Stephanoz Siddiquas ,Greece ,tennis tournament ,French Open ,round , Swiss,Roger Federer,Greece's Stephanoz Siddiquas,won,first round,French Open tennis
× RELATED ஆயிரம் போட்டிகளில் விளையாடி பிரபல...