×

பில்டர்களை கண்டுகொள்ளாத அதிகாரிகள்: ராம்பிரபு, அகில இந்திய கட்டுனர் சங்க தென்னக மைய தலைவர்

சிறியதாக பிளாட் வைத்திருப்பவர்கள் கூட 20 அடியில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை போடுகிறார்கள். அதற்கு மேல் யாரும் போடுவதில்லை. 20 அடி போட்டு பிறகு அதற்குள் பெரிய ஜல்லியை போட்டு மாடியில் இருந்து ஒரு பைப் லைன்  கொண்டு வந்து விட்டுவிடுகின்றனர். இது தான் பரவலாக செய்யப்படுகிறது. இதனால் மாடியில் வரும் மழைநீர் அந்த 20 அடி உள்ள உறைகிணற்றில் சென்று அது நிறைந்த பிறகு தானாக மழைநீர் சாலைக்கு தான் போகும். இதற்கு என்ன  பண்ணலாம் என்றால் சிறிய பிளாட்களில் பண்ண முடியாது. ஆனால், பெரிய பிளாட் வைத்திருப்பவர்கள் 10 அடியில் குழிதோண்டி அதில் ஜல்லி போட்டு பில்டர் பண்ணி பக்கத்தில் தொட்டி கட்டி தண்ணீரை அதற்கு கொண்டு வரலாம். இதனால் பூமிக்கு கீழே போகிற தண்ணீர் போக தானாகவே தொட்டிக்கு மழைநீர் போய்விடும். மழைநீராக வருவதால் அவ்வளவு கழிவுகள் இருக்காது. பில்டர் மூலம் சுத்திகரிக்க முடியும். பெரிய பில்டர்கள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை  செய்கின்றனர். ஆனால் சிறிய பில்டர்கள் இதை பண்ணுவது இல்லை. எனவே மெட்ரோ வாட்டர் குடிநீர் இணைப்பு, கழிவு நீர் வெளியேற இணைப்பு கொடுப்பதற்கு முன்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து மழைநீர் சேகரிப்பு தொட்டி இருந்தால் தான்  இணைப்பு கொடுக்க வேண்டும் என்பது தான் விதி.

 ஒருசிலர் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டியபிறகு அனுமதி வாங்குகின்றனர். ஆனால் சில அதிகாரிகள் இதை கண்டுகொள்ளாமல் அனுமதி அளித்து விடுகின்றனர். எனவே அதிகாரிகள்  முறையாக ஆய்வு செய்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தினால் மட்டுமே அனுமதி கிடைக்கும் என்பதை கட்டாயமாக்க வேண்டும். இதனால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும். மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு நகர்புறங்களில்  பெரிய பிளாட்களில் கட்ட முடியும். ஆனால் சிறிய பிளாட்  கட்டும் பில்டர்கள் தாங்களாக முன்வந்து  பொதுவாக கட்டிடங்களில் கட்டுவதற்கு அதிகமாக தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்கு மாற்று என்னவென்று பார்க்க வேண்டும். அதாவது  செங்கல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். செங்கல் பயன்படுத்தினால் கட்டும் போதும் அதிகளவு தண்ணீர் தேவைப்படும். அதனால் ஏசிசிபி பிளாக் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். பெரிய கட்டிடம் கட்டுபவர்கள் அனைவரும் ஏசிசிபி  பிளாக் பயன்படுத்துகிறார்கள்.

செங்கல் பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு ஏசிசிபி பிளாக் பயன்படுத்த வேண்டும். ேமலும் செங்கல் தயாரிக்க மூன்று விதமாக தண்ணீர் தேவைப்படுகிறது. அதாவது செங்கல் தயாரிக்கவும், கட்டும் போது கலவைக்கும் தண்ணீர் வேண்டும்  இதனால் அதை தவிர்க்க அனைவரும் ஏசிசி பிளாக் பயன்படுத்தலாம். மேலும், ஏசிசி பிளாக் போட்டு கட்டினால் பேஸ்ட் போன்று கெமிக்கல் கொடுத்து விடுகின்றனர். அதனால் செங்கல் தயாரிக்கும் தண்ணீர் மிச்சம், கலவை கட்டுவதற்கான  தண்ணீர் மிச்சம். கட்டிடம் கட்டுபவர்கள் எங்கெல்லாம் தண்ணீர் மிச்சப்படுத்த முடியுமோ அங்கேயும் பண்ணினால் நன்றாக இருக்கும்.மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டி அதன் மூலம் தண்ணீரை சேமிக்கலாம், இதுபோன்று கட்டிடம் கட்டும் போது தண்ணீரை மிச்சப்படுத்தினால் நன்றாக இருக்கும். மேலும் ஏற்கனவே வீடு கட்டியவர்கள் கூட காம்பவுண்ட் சுவருக்கும், வீடுகளுக்கும்  இடையே இடைவெளி இருந்தால் ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டாதவர்கள் கூட பண்ணலாம். இப்போது பண்ணினால் அடுத்து வரும் மழைகாலத்தில் தண்ணீரை சேமித்து வைக்க உதவியாக இருக்கும். எனவே அரசு மழைநீர்  தொட்டி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தினால் மட்டுமே அனுமதி கிடைக்கும் என்பதை கட்டாயமாக்க வேண்டும்.




Tags : Rambirub ,All India Bundling Association , Builder, Ignored, Rambrabhu, Central Coordinator
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...