×

தென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 8 ஆக பதிவு

சிலி: தென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கு பெருவில் பகல் 1 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 8 ஆக பதிவாகியுள்ளது என ஈக்வடார் புவியியல் ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலநடுக்கம் தரையிலிருந்து 109 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதும் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. நில அதிர்வு உணரப்பட்டால் பொதுமக்கள் வீதிகளில் அங்கும், இங்கும் பீதியில் ஓடினர்.

அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயம் அடைந்தோர் விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை. 2010-ம் ஆண்டு சிலியில் நிகழ்ந்த பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமியில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : country ,Peru ,South American , South America, the strong earthquake
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...